ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரங்கனையான சுசந்திகா ஜயசிங்கவுக்கு(Susanthika Jayasinghe) மீண்டும் அரச பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய அவர் விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும(Dullas Alagaperuma) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.