பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா கூட்டணி ஆரம்பித்துவிட்டதாகவும், பிரியங்காவை அபினய் விரும்புவதாக தற்போது ப்ரொமோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதுவும் இதில் தொகுப்பாளனி பிரியங்காவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு வேற லெவல் என்றே கூறலாம்.
ஆனால் பிரியங்காவின் நடவடிக்கை தற்போது நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், அடுத்த அர்ச்சனாவாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேற்றைய தினத்தில் பாவனி கூட்டணி பற்றி பேசியிருந்தார்.
இதனை உறுதி செய்யும் விதமாக அபிஷேக், நிரூப், பிரியங்கா அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது அபிஷேக் பிரியங்காவினை அபினய் விரும்புவதாகவும், இது அவரது கண்களில் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் “இந்த கேங் மீது பல பேருக்கு வெறியாக இருக்கும், நாம் மூன்று பேரும் ஒரே மாதிரி டிஸ்லைக் கொடுத்திருக்கிறோம். இங்த கேங் வேண்டுமென்றே உருவாக்கவில்லை.
இது ட்ரையல் தான், இன்னும் சில நாளில் அது டபுள் டமாகா ஆகி விடும் என அபிஷேக் கூற, அப்போது இவன் வெளியே போயிருப்பான் என கிண்டல் செய்கிறார்.
#Day9 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/CbPg0WYsqn
— Vijay Television (@vijaytelevision) October 12, 2021