இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் ஆரம்பிக்கும்.
இனிப்புகள், கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிமாறும் இந்நாள் ஏன் டிசம்பர் மாதம் 25 ல் கொண்டாடப்படுகிறது? இதன் வரலாறு என்ன என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
கிறிஸ்துமஸ் வரலாறு
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்துவின் மாஸ் (அல்லது இயேசு) என்பதிலிருந்து பெறப்பட்டது.
இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்த தேதி இதுவரை தெரியவில்லை. இருப்பினும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.