மூட்டு வலி என்பது எலும்புகளின் ஏற்படும் தேய்மானத்தால் வரகூடிய ஒன்றாகும். இளம் வயதினருக்கு கூட இக் காலகட்டத்தில் மூட்டுவலி வருகிறது.
பொதுவாக மூட்டு வலி குளிர்காலத்தில் அதிகரிக்கும் ஒரு பிரச்சனையாகும். இதேவேளை மூட்டுவலிகள் அதிகரிப்பதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் மூட்டு வலி ஏற்படுவதை தடுக்கலாம் அல்லது உரிய நிவாரணம் பெறலாம்.
மருத்துவர்களின் கூற்றுப்படி,
வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் உள்ள மூட்டுகளை சுற்றியுள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கங்கள் மூட்டில் வலியை ஏற்படுத்துகிறது.
குளிர்காலத்தில் வெப்பநிலையில் மாற்றம் நிகழலும். இதனால், உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதால் சில ஆரோக்கியமான விஷயங்களை இந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலை சூடாக வைத்திருக்க வேண்டும். இதனால் மூட்டுவலி மட்டுமல்லாது மற்ற பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
குளிர்காலத்தில் உடல்களை வெப்பநிலையில் வைத்துகொள்ளும் உடைகளை அணிவது மிகவும் கட்டாயமாகும். இதனால் உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாமல் இருக்கும். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் பராஃபின் மெழுகு அல்லது ஹீட்டிங் பேட் ஆகியவற்றை வலி இருக்கும் பகுதியில் வைக்கலாம்.
மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் விறைப்பை தடுக்க வைற்றமின் ‘D’ ஊட்டச்சத்து இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வைற்றமின் ‘D’ கிடைக்கும் என்பதால் நாள்தோறும் காலையில் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம்.