பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும்.
பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், தாது உப்புகளும், குளுட்டாமிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை எடை இழப்பு. எலும்பு ஆரோக்கியம் மற்றும் நமது மனநிலையை மேம்படுத்துதல் போன்ற விஷயங்களுக்கு உதவுகிறது.
மேலும், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு அபாயங்களை குறைப்பது வரை பல விஷயங்களுக்கு பாதாம் உதவுகிறது.
பாதாம் பால் பல நன்மைகளை கொண்டிருப்பது போலவே உடலுக்கு சில தீமைகளையும் இது ஏற்படுத்துகிறது.
அந்தவகையில் தற்போது பாதாம் பால் அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அதிகப்படியாக பாதாம் உண்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் குமட்டல், வயிற்றில் அசெளகரியம், வயிற்றுப்போக்கு மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற உடல் கோளாறுகள் ஏற்படலாம்.
சிலருக்கு முந்திரி, பாதாம் போன்ற விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு பாதாம் பால் இயற்கையாகவே உகந்தது அல்ல.
கடைகளில் பாதாம் பால் செய்யும்போது அவற்றில் அதிகமான அளவில் இனிப்பு சேர்க்கப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வெளியில் பாதாம் பால் அருந்துவதை தவிர்க்கலாம்.
தைராய்டு செயல்பாடுகள் குறைவாக உள்ளவர்கள் பாதாம் பாலை உட்கொள்வதை தவிர்க்கவும் அல்லது மிதமான அளவில் பாதாம் பாலை உட்கொள்ளவும். ஏனெனில் பாதாமில் தைராய்டில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அதிகமாக உள்ளன.
பாதாம் பாலானது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. கை குழந்தைகளுக்கு பாதாம் பால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே பாதாம் பாலை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்கவும்.