இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் , கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியான பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சில நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13 வது பிரதமராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் மற்றும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மன்மோகன் சிங்கிற்கு, 2009ல் எய்ம்ஸில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.