கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்தாக பயன்பட்டு வருகின்றது.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கு பல நன்மைகளை வாரிவழங்கின்றது.
குறிப்பாக முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்க உதவுகின்றது. அந்தவகையில் தற்போது சரும வறட்சியை போக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல் – ½ கப்
தேன் – 10 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் – 50 மிலி
எப்படி செய்வது ?
தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யைக் கலந்து ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும். பின்னர் அதனை குளிர விடுங்கள்.
அத்துடன் கற்றாழை ஜெல், அத்தியாவசிய எண்ணெய் சில துளிகளை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதனைக் கொண்டு உங்களின் சருமத்தை மசாஜ் செய்து, வறண்ட சருமத்தில் இருந்து விடுபடுங்கள்.
கற்றாழை வீக்கம், அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதேபோல் தேன் மெழுகு, சருமத்தை ஈரப்பதமாக்கி வறண்ட சருமத்தை போக்குவதோடு, தோல் தொற்றுகளையும் தடுக்க உதவுகிறது.