மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் (G. L. Peiris ) தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையானது இம்மாதம் 21 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், அதை நீடிப்பது தொடர்பில் கோவிட் செயலணி தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை தனது எல்லைகளை திறக்கும் என்றும்,நாட்டை திறக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, அக்டோபர் 16ஆம் திகதியுடன் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.