இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பாரிய போராட்டம் நடத்தப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னேரியாவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
தரமான உரத்தைச் சரியான நேரத்தில் பெற வேண்டும் என்பதே எமது ஒரே வேண்டுகோள். வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.