அமெரிக்கா,இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளின் யுத்த மைதானமாக இலங்கை எதிர்காலத்தில் மையப்படுத்தப்படும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Vijayadasa Rajapaksa)தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவிற்கு பிரதான வளங்களை வழங்கியதன் பிரதிபலனாக கெரவலபிடிய மின்நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டியுள்ளது.சீனாவின் பொறிக்குள் இருந்து நீங்கும் வரை இலங்கைக்கு இந்தியா,அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அழுத்தங்களிலிருந்து விடுபடமுடியாது.
எப்போது வெளிநாட்டு கடன் என்ற எரிமலை வெடிக்கும் என்று ஊகிக்க முடியாத அளவிற்கு கடன் சுமையில் நாடு உள்ளது. சீனாவுடன் நெருங்கியவர் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து நாடு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் அரச தலைவர்கள் தலதா மாளிகைக்கும், ருவன்வெலிசாயவிற்கும் சென்று நாட்டின் வளங்களை விற்கமாட்டோம் என்று சத்தியபிரமாண ம் செய்கிறார்கள்.
2000ஆம் ஆண்டிலிருந்து தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரச தலைவர்களிடம் புரையோடிபோயுள்ளது.
பலம்வாய்ந்த நாடுகளில் இருந்து விடுபடும் முறைமையை கொண்ட அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்கள் தயாராவுள்ளார்கள். தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் நாட்டுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதை அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள். ஆனால் எதிர்ப்பதற்கு அவர்களுக்கு தைரியம் கிடையாது. மக்களே இனி நடப்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.