மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவும் நீண்டஆயுள் பெறவும் சத்தான உணவுகளை ஆராய்ந்து சாப்பிட்டு வருகின்றனர். பாலில் இருந்து உடலுக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைப்பதால் சிலர் இரண்டு வேளையும் பசும்பால் குடிப்பது உண்டு.
ஆனால் பசும் பாலை விட தேங்காய் பாலில் அளவு கடந்த நன்மைகள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. சரி வாங்க தேங்காய் பாலை தவறாமல் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
- நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடல் பல நோய்களால் பாதிக்கப்படத் வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் பால் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படும். தவறாமல் தினமும் தேங்காய்ப்பால் குடித்து வந்தால் நீரிழிவு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.
- நீங்கள் உடல் பருமன் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால் தேங்காய் பால் உங்களுக்கு உதவக்கூடும். தேங்காய் பாலில் ஒரு சிறப்பு வகை கொழுப்பு அமிலம் உள்ளது. இது எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் எடை அதிகரிக்காதபடி, தவறாமல் தேங்காய் பால் குடிக்க வேண்டும்.
- வயிற்றை சரியாக சுத்தம் செய்யாதவர்கள் பெரும்பாலும் வாய் புண்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே தேங்காய்ப் பாலை உட்கொண்டால் அது புண்களின் பிரச்சினையை பெருமளவில் குறைக்கிறது.
- மாறிவரும் வானிலை காரணமாகவோ அல்லது அசுத்தமான உணவு காரணமாக பல முறை நீங்கள் பாக்டீரியா தொற்றுக்கு ஆளாக நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில் பாக்டீரியா எதிர்ப்பு உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.