அமெரிக்காவில் தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஓக்லஹோமா-டெக்சாஸ் எல்லைக்கு அருகில் உள்ள Thackerville-ல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அளித்த தகவலின் படி, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி இடையே தினசரி இயக்கப்படும் அம்ட்ராக் 822 ரயில் அந்த பாதையை கடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், கார்களை ஏற்றி வந்த டிரக் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது.
தண்டவாளம் சிறிது உயரமாக அமைக்கப்பட்டிருந்ததால், பல கார்களை ஏற்றி வந்த டிரக் தண்டவாளத்தின் குறுக்கே சிக்கிக்கொண்டது.
டிரக் ஓட்டுநரால் வாகனத்தை முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்த்த முடியாமல் போயுள்ளது.
இச்சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் 911-க்கு அழைத்துள்ளார். அதிகாரிகள் ரயில்வே நெட்வொர்க் ஆபரேட்டரை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்த முடியவில்லை என காவல்துறை அதிகாரி கூறினார்.
தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோத அதிலிருந்து கார்கள் சுக்குநூறாக நொறுங்கியதை சம்பவயிடத்தில் இருந்து நபர் வீடியோவாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.
இதில், டிரக்கில் இருந்த ஓட்டுநர் மற்றும் அவருடைய நாய்-க்கு கயாம் ஏதும் ஏற்படவில்லை.
ரயில் இருந்த 5 பேர் காயமடைந்த நிலையில், 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தின் போது 110 பயணிகள் மற்றும் குழு உறுப்பினர் ரயிலில் இருந்தனர், விபத்து தொடர்பில் உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என அம்ட்ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, எனினும், மீட்பு பணிகள் முடிந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் அப்பாதையில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
Dramatic video captured the moment an Amtrak train slammed into a semi-truck hauling several cars in Oklahoma, sending vehicles and debris flying and injuring several people on board. https://t.co/UmeGQ4HvzW pic.twitter.com/2tEHglcDd9
— ABC News (@ABC) October 17, 2021