ஆப்கானிஸ்தான் – பைசாபாத் நகரில் இன்று அதிகாலை 1.41 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து சுமார் 128 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.