எதிர்வரும் 21 ஆம் திகதி 200 ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் தற்போது பிரதேச செயலகங்களில் பயிற்சி பெறும் பட்டதாரிகளை,பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகங்களின் செயலாளர், மாவட்டச் செயலாளர்களுக்கு, இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
அரச பணிக்கு 53,000 புதிய பட்டதாரிகளை தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படுவதாக கூறுகிறது. அவர்களில் 18,000 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவையான எண்ணிக்கையிலான பட்டதாரிகளையும் வழங்க முடியும் என்று பொது சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, பாடசாலைகளை மீண்டும் திறப்பது நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக 200 -க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 3,000 பாடசாலைகளை 21 -ம் திகதி திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.