சதோச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவை 98 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கை சந்தையில் அரிசி விலைகள் அதிகரித்தன் காரணமாக அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, ஒரு கிலோ கிராம் அரிசியை 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு தொகை அரிசியை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வந்தது. மேலும் ஒரு தொகை அரிசியை ஏற்றிய கப்பல், இன்று இலங்கையை வந்தடையலாம்.
இதன் பின்னர் நாடு முழுவதும் சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கிராம் பொன்னி அரிசியை 98 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.