இலங்கைக்குள் கோவிட் பரவல் ஓரளவு குறைந்துவிட்டாலும், கோவிட் பரவும் ஆபத்து இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறிப்பாக வார இறுதியில் மக்களின் நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Dr Hemantha Herath) இன்று செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார்.
கோவிட் ஆபத்து மறைந்துவிட்டது போல், பொதுமக்கள் நடந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தங்கள் வார இறுதியில் உல்லாசப் பயணங்களை எப்படி கழித்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது.
மக்களின் இந்த பொறுப்பற்ற நடத்தையை மன்னிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார். பொது மக்கள் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.