இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லேட்(michel bachale) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசார குழுவிடம் தகவல்களை வழங்கி, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் பெரும்பான்மையான நாடுகளின் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 48/20 மற்றும் 46/1 ஆகிய யோசனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாகவும் மிச்சேல் கூறியுள்ளார்.
காணாமல் போக செய்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிதியை நிறைவேற்றும் செயற்பாடுகளில் தனது அலுவலகம் தலையீடுகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகிறது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை தவிர, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், புர்கினா பாசோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா, மாலைதீவு, சூடான் உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் மனித உரிமை ஆணையாளர் விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்.