தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளையும் (29) நாளை மறுதினமும் (30) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமான அல்லது கன மழை பெய்யக்கூடும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பருத்தித்துறையின் கற்கோவளத்திலிருந்து கிழக்காக 430 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று மாலை 6.00 மணியிலிருந்து மணித்தியாலத்திற்கு 1.2 கி.மீ. வேகத்திலேயே நகர்கின்றது. இதே வேகத்தில் நகர்ந்தால் இது கரையைக் கடக்கும் திகதி மாற்றமடையும்.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 30.11.2014 அன்று இந்தியாவின் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.
இதில் வேடிக்கையான விடயம் யாதெனில், தற்போது பருத்தித்துறைக்கு கிழக்காக 430 கி.மீ. தொலைவில் உள்ள இதன் மையம், கரையைக் கடக்கும் போது பருத்தித்துறைக்கு வடகிழக்காக 113 கி.மீ. தொலைவில் காணப்படும்.
ஆகவே, இதன் மூலமே இதன் நகர்வு பாதை எத்தன்மை வாய்ந்ததென அறிய முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகமும் திசையும் நிச்சயமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம்