யாழ்ப்பாண மாவட்டம் – நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.
நேற்றையதினம் (29-11-2024) வீசிய பலத்த காற்றினால் இந்த அரசமரம் குடை சாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தினால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது.
எனினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை
குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.