இரத்தினபுரியில் வீடொன்றிலிருந்து 24 வயது யுவதியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின், பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த யுவதியின் சடலத்தை பலாங்கொடை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முல்பனான, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.