இலங்கையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று மாத்தறை, வவுனியா, கண்டி, குருணாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலமும் சகல சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பேணிய வண்ணம் மட்டுப்படுத்தப்பட சேவை பெறுனர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அத்தியாவசிய தேவையுள்ள சேவைப்பெறுனர்கள் மாத்திரம் தமக்கு அண்மையிலுள்ள அலுவலகத்திற்கு http://www.immigration.gov.lk/ என்ற இணைய வழியைப் பயன்படுத்தி திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, திகதியொன்றை ஒதுக்கிக் கொள்ளாது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவோருக்கு அலுவலக வளாகத்திற்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டது எனவும் அறிவுறுத்தல் வழங்க்கப்பட்டுள்ளது.