மாகாணங்களுக்கிடையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை நீக்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் இவ்வாறு பயணத்தடை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கூடிய கோவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.