இலங்கையில் இதுவரை நடந்த தவறுகளில் மிகப்பெரிய தவறு இரசாயன பசளையை தடை செய்தமையாகும் என இலங்கையின் பிரபல வர்த்தகரான நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வறிய மக்கள் வாழும் நாட்டில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அந்த வறிய மக்களுக்கு எதிர்காலத்தில் உலகில் விலையுயர்ந்த இறைச்சி கிடைக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் கள்ளச் சந்தையில் மாட்டிறைச்சி பரவலாகக் கிடைக்கும். அப்போது அவற்றை பிடிப்பதற்காக பொலிஸ் துறையில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த நேரிடும் எனவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.