மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 10 மணிக்கு மாபெரும் அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவைத் திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.
“தற்போது கால போக நெற்செய்கை ஆரம்பித்துள்ளது. அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற இ. சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) அறைகூவல் விடுத்துள்ளார்.