டெல்டா வைரஸ் பிளஸ் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்த தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தால், அதைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பு முக்கியமானது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Channa Jayasumana) கூறினார்.
தடுப்பூசி போட்ட பிறகும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடாதீர்கள் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.