யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன் பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குறித்த சமபவம் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.