கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த தயங்க வேண்டாம் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையாகையை உள்ளங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் பத்மா குணரத்ன முன்வைத்தார்.
மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் பெருமளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் பாதுகாப்பு தன்மையை விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆன பின்னே இலங்கை அரசு அந்த தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.