சீனாவில் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் குழந்தைகள் கல்விக் கற்று வந்தனர், இந்நிலையில் கொரோனா குறையத் தொடங்கியதும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அதிகளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்க, குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.
இதனை கருத்தில்கொண்டு சுீனாவில் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.