யாழில் பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மக்களுக்கான தனிக் கட்சியொன்றை உருவாக்கத் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த அரசியவாதியின் தந்தை ஒரு கோடீஸ்வரர் ஆவார்.
அதோடு இந்த நபர் 2013ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற குறித்த அரசியல் வாதி 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின் நாடாளுமன்றம் சென்றதுடன் புதிய நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட மட்டத்தில் முக்கிய பதவியில் உள்ள குறித்த அரசியல் பிரமுகர், தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளமை கொழும்பு அரசியலில் தீவிரமாக பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பொருத்தமான உறுப்பினர்களை மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களாக தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே ஐந்து பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.