திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பத்து சந்தேகநபர்களை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.
தம்பலகாமம்,முள்ளிப்பொத்தானை,குளியாப்பிட்டி,வத்தளை,குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த 46,48,40,38,41,55,38,54,32,43 வயதுடைய பத்து பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்பலகாமம் ஐயனார் தீவு பகுதியில் புதையல் தோன்றிய நிலையில், தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரம்,மண்வெட்டி,கூடைகள் பிக்காசு இயந்திரங்கள் போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.