முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் போது கைவிடப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு காட்டுப்பகுதியில் இந்த வெடிபொருட்கள் நேற்று சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் கைவிடப்பட்ட அல்லது மறைத்து வைக்கப்பட்ட 60 மில்லிமீற்றர் எறிகணை உள்ளிட்ட இராணுவ பயன்பாட்டில் பயன்படுத்தப்படாத 21 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்களை தகர்த்து அழிக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.