பிரான்சில் தற்பொழுது மூச்சுக் குழாய் அழற்சி நோய், சிறுவர்களை தாக்க ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான, உயிர்கொல்லி நோய் என பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இந்தப் பெருந்தொற்று நோய், பிரான்சை கடுமையாக தாக்கியமையினால் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. மீண்டும் மிகவும் மோசமாகத் பரவ ஆரம்பித்துள்ளதாக பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவச் சபையின் தலைவர் Christèle Gras-Le Guen எச்சரித்துள்ளார்.
முக்கியமாக இரண்டு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை, பலர் முன்னிலையில் வைத்திருப்பதைத் தவிரக்குமாறும், பொது இடங்களுக்கு குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரிய குடும்பங்கள் ஒன்றுக்கூடும் இடங்களில் குழந்தைகளை வைத்திருக்க வேண்டாம். கைக்குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு குளிர்காலத்தில் வரும் தடிமன் காய்ச்சல் வந்தால் கூட, அவர்கள் வீட்டிலும் முகக்கவசங்கள் அணிவது அவசியமாகும். குழந்தைகளைத் தொடுவதற்கு முன்னரும் தொட்ட பின்னரும்கும் கைகளைச் சுத்தமாகக் கழுவும் பழக்கத்தை பெற்றோர்கள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த நோய் குழந்தைகளின் சுவாசத் தொகுதியைப் பாதிப்பதால் பெரும் அவதானம் தேவை என கொரோனா காரணமாக ஒரு ஆண்டின் பின்னர் தற்போது பரவும் இந்த தொற்று மிகவும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நோயின் தீவிர வடிவங்கள் ஏற்படுகின்றன. இருமல், காய்ச்சல், மூக்கில் அடைப்பு மற்றும் சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமம் போன்ற மூச்சுக்குழாய் அழற்சியின் முதல் அறிகுறிகள் தோன்றினால், 2 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் அவசர சிகிச்சையை அணுக வேண்டும். பெரும்பாலும் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும்.
அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குழந்தைகளை கொண்டு செல்லுமாறு பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவச் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.