ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்றைய தினம் பாம் கார்ட்ன் ஹோட்டலுக்கு அழைக்க எதிர்க்கட்சி கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் செய்ய வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடத்துவதற்காக இந்த ஒன்றுக்கூடல் இடம்பெற்றுள்ளது.
அங்கு தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பிலும் அதனை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது உரையாற்றுவதற்காக பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் பலர் இணைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.