ஸ்கொட்லாந்தில் வெளியாகும் பிரதான செய்தித்தாளான தி. ஹெரல்ட் பத்திரிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) சம்பந்தமாக முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட அந்நாட்டில் வாழும் தமிழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து பொலிஸார் மனித உரிமை மீறல்களுக்குப் பயிற்சியளிக்காமல் விசாரணை நடத்த வேண்டும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள “கோப் 26” மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அதற்கு எதிராக இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மிகப் பெரிய புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிராக ஒன்று கூடுமாறு, அங்கு வாழும் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து, ஸ்கொட்லாந்தில் வாழும் சிங்கள மக்கள், அடுத்த சில தினங்களுக்குள் அதே பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.