யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.
எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் வழங்க முன்வருமாறு இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிகளுக்கு சென்று இரத்ததானம் செய்து குருதி தட்டுப்பாட்டினை கட்டுப்படுத்தி உயிர்களை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்கள் செலுத்தப்பட்ட தினத்திலிருந்து ஒரு வார காலத்தின் பின்னர் இரத்ததானம் மேற்கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.