ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa ) செயற்பாடுகளுக்கு சவால் விடும் வகையில் சில தொழிற்சங்கங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
துறைமுகங்கள், எரிபொருள், தபால், போக்குவரத்து, அரச வங்கிகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, அரசாங்கத்தினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றியமைக்கப்படாதது தொடர்பில் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் தேசிய தொழிற்சங்க நிலையம் அதிருப்தி வெளியிட்டன. “
அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இருந்து மின்சார சபையை நீக்கியுள்ளது. எரிசக்தி துறை முழுவதையும் அமெரிக்காவிடம் அரசாங்கம் கையகப்படுத்த தயாராகிறது.
அரசாங்கத்திற்கு முடியும் என்றால் அத்தியாவசிய சேவையாக அறிவித்து நாங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கையை நிறுத்திக் காட்டுங்கள். அது தோல்வியிலேயே முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நோயைத் தடுப்பதற்காக சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் விதிமுறைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.