யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையினருக்காக தனியாரின் காணிகளை சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை சுவீகரிக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அளவிட்டு பணிகளுக்காக வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றுள்ளனர்.


















