உலகளாவிய ரீதியில் இந்துக்கள் அனைவரும் இன்றைய தினம் தீபத்திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கோவிட் பெருந்தொற்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி கொண்டாட்டத்திற்கு மக்கள் நேற்றைய தினமே ஆயத்தமாகியிருந்தனர்.
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் தீபத்திருநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் தீபாவளி தின பூசை வழிபாடுகள் சுகாதார நடைமுறைகளுக்கமைய சிறப்பாக நடைபெற்றுள்ளன.
இதன்போது மக்கள் சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசங்களை அணிந்து சுகாதார முறைப்படி பூசைகளில் கலந்து கொண்டதுடன் இதன்போது பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.