கிளாஸ்கோவுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 26வது பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தார்.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலின்படி, ஒக்டோர் 31 முதல் நவம்பர் 12வரை அமர்வுகள் நடைபெறுகின்றன.
அதில், நவம்பர் முதலாம் திகதியும் இரண்டாம் திகதியும் மாநாட்டுக்கு புறம்பாக, நாடுகளின் தலைவர்களுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. 197 நாடுகளின் பிரதிநிதிகளாக சுமார் 25000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.