அமெரிக்காவின் நியூ போற்றீஸ் எனர்ஜி மின்சார நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தமுடியாது என்று இலங்கையின் மின்சார சபையின் தலைவா், எம்எம்சி போ்டினன்டோ தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கு பின்னரே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. எனினும் உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் கீழ், அதன் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தமுடியாது என்று மின்சார சபையின் தலைவர் தொிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை, இதுவரை மின்சாரசபைக்கு கூட சமா்ப்பிக்கப்படவில்லை. இந்தநிலையில் உடன்படிக்கையில் உள்ள அம்சங்களை வெளிப்படுத்தமுடியுமா? என்று திறைசேறியின் செயலாளா், சட்ட மா அதிபாிடம் ஆலோசனை கேட்டுள்ளார் என்றும் மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த உடன்படிக்கையை ஆட்சேபித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.