தமிழர்களின் பிரதான உணவு தான் சாதம் என்று அழைக்கும் சோறு. சோறு உண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்.
இன்று அதை பற்றி பார்க்கப்போவது இல்லை.
சோறு சமைப்பதற்கு முன்பு நாம் கழுவி வீசும் நீரில் இருக்கும் நன்மைகளை குறித்து தான் ஆராய போகின்றோம்.
குறிப்பாக அரிசி கழுவிய நீரை நாம் அனைவரும் தூக்கி வீசிவிடுவோம்.
இது தான் வழக்கம். ஆனால் இதில் பல்வேறு அழகின் ரகசியம் மறைந்து கிடக்கின்றது.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் டி
வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
இந்த அற்புத நீரை தயாரிப்பது எப்படி?
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரை நாம் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
நீங்கள் இதை உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில், உடலில் அதிக நீழிப்பு ஏற்படும். அப்போது அரிசி தண்ணீரை அருந்தலாம்.
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும்.
தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்துளைகளும் அடைக்கப்படும்.
வறட்சியான கூந்தழுக்கு இதை விட சிறந்த மருந்து கிடையாது.
அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.
இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.
மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.