இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் பிரபு தேவா. இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தற்போது தமிழில் உருவாகியுள்ள பகீரா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர் பிரவுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஷால், மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மரணமடைந்தார். இதன்பின் திரையுலகில் நடிகை நயன்தாராவுடன் பிரபு தேவாவிற்கு ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. பிரபு தேவாவிற்கு காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் தொடர்ந்து இந்த காதல், திருமணம் வரை சென்றது.
ஆனால், பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலதா, மகளிர் அமைப்புகளை நாடி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை எழுப்பினர். இதனால், பிரபு தேவா கடந்த 2011ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்தார். இதன்பின் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவையும் பிரிந்தார்.இதன்பின், பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை பிரபு தேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது.
இந்த தகவலை பிரபு தேவாவின் சகோதரர் உறுதி செய்தார். இந்நிலையில் நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளாராம்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.