குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைகள் எதிா்வரும் திங்கட்கிழமையில்( நவம்பர் 8) இருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளா் தம்மிக்க ஜெயசுந்தர தொிவித்துள்ளாா்.
இரவு ரயில்கள் மற்றும் அஞ்சல் ரயில்களை இயக்குவது தொடா்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்
கடந்த முதலாம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து அலுவலக ரயில்கள் மாத்திரமே இயக்கப்படுகின்றன.
எனினும் இரவு 7 மணிக்கு பின்னா் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இந்தநிலையில் அந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஜெயசுந்தர தொிவித்துள்ளாா்.