திருகோணமலை – கந்தளாய் சீனி தொழிற்சாலை விரைவில் திறக்கப்படவுள்ளதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை மற்றும் சிறு பெருந்தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர (Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையின் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று மாலை பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியிலுள்ள விவசாய சங்கங்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அமைச்சரவை பத்திரத்தினை தாக்கல் செய்து இவ் சீனி தொழிற்சாலையினை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகளை பார்வையிடவே தாம் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.