வட்டவளை – மவுன்ஜீன் தோட்டத்தில் பெண்ணொருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை தடுப்பதற்கு சென்ற நிலையிலேயே குறித்த பெண் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.


















