நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கை அவதானிக்க முடிவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 20 நாட்களின் பின்னர் இன்றைய தினம் நாட்டில் 600க்கும் மேற்பட்ட தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தினம் இதுவரையில் மொத்தமாக 627 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு செயலணியின் பிரதானியுமான ஜெனரால் சவேந்திர சில்வா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 544012 ஆக உயர்வடைந்துள்ளது.