நாட்டில் மீண்டும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டால் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை உருவாகும் என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார (Wasantha Yapa Bandara) தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளினால் மீளவும் கோவிட் தொற்று பரவி முடக்க நிலை அறிவிக்கப்பட்டால் அது பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொழிற்சங்ங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வரும் நிலையில் தொழிற்சங்கங்கள் பொறுப்பின்றி செயற்பட்டு வருவதாகத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.