பிரித்தானியாவில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வார இறுதி நாட்களில் மிகவும் கவனமுடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சுமார் 5.4 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான அறிகுறிகள் உள்ளன.
பிரித்தானியாவில் இருக்கும் Asthma UK, ஒவ்வொரு நாளும் பிரித்தானியாவில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட 3 பேர் இறப்பதாக குறிப்பிடுகிறது. இதனால் ஆஸ்துமா நோயாளிகள் இந்த வார இறுதிநாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறப்பட்டுள்ளது.
ஏனெனில், பிரித்தானியாவில் இந்த வார இறுதி நாட்களில் bonfire மற்றும் firework, அதாவது இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி கொண்டாடுவது, பட்டாசுகள் வெடிப்பது. இதன் காரணமாக இப்போதில் இருந்தே, பழுப்பு நிற inhaler எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
இதைப் பயன்படுத்துவதன் மூலம், காற்று வழியில், அந்த நெருப்பு மூட்டியில் இருந்து வரும் புகைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் bonfire மற்றும் firework கொண்டாட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நெருப்பில் இருந்து சற்று தள்ளி நிற்கும் படியும், அந்த நேரத்தில் உங்களிடம் நீல நிற inhaler, ரிலீவர் inhaler உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு, இந்த கொண்டாட்டத்திற்கு பல இடங்களில் அனுமதி கொடுக்கப்படவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு இதே நவம்பர் மாத காலக்கட்டத்தில் பிரித்தானியாவில் சுமார் 7600-க்கும் மேற்பட்டோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சமூகப் பராமரிப்பாளர், Kayleigh Robus, இந்த நெருப்பு கொண்டாட்டம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்துள்ளார். ஏனெனில், இவருடைய வீட்டிற்கு அருகில் இருந்த நபர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர், அவர் இந்த நெருப்பு புகை காரணமாக இறக்கும் நிலைக்கே சென்றுள்ளார்.
மேலும், West Sussex-ல் உள்ள Burgess Hill பகுதியைச் சேர்ந்த 29 வயதான அவர் தனது மகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு இறுகுவதை உணர்ந்தார்.
அதன் பின் உடனடியாக inhaler-ஐ பயன்படுத்தினார். அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு ஐந்து நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.
இது குறித்து அவர் கூறுகையில், அது ஒரு பயங்கரமான அனுபவம். உரிய நேரத்தில் நான் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றால் இறந்திருப்பேன். நெருப்பிலிருந்து வரும் புகை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும்.
இதனால் அடுத்த வாரத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்துமா UK-யின் ஆலோசனைத் தலைவர் Jessica Kirby கூறுகையில், பட்டாசு வெடிப்பதும், நெருப்பு வைப்பதும் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.
ஆனால், அதே சமயம் உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அது உங்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கலாம். பட்டாசு வெடிப்பது, நெருப்பு வைப்பு கொண்டாட்டத்தின் போது, காற்றில் கலக்கும் புகையின் அளவு அதிகரிப்பதால், இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும், அந்த நேரத்தில் நமக்கு பாதுகாப்பாக இருப்பது inhaler என்பதை நினைவுபடுத்தினார்.