கொரோனா பாதிப்பால் கேரளாவில் 314 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 392 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,60,265 ஆக அதிகரித்துள்ளது
கேரளா தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 6,580 பேர் அடங்குவர். அதாவது புதிய பாதிப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் கேரளாவில் உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 683 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,16,101 பேர் அடங்குவர்.
பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,01,835 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 314 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 392 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,60,265 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,362 பேர் அடங்குவர்.
கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 12,509 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 37 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,46,950 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 255 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று மக்களுக்கு 20,75,942 தடுப்பூசிகள் போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 107 கோடியே 92 லட்சத்தை கடந்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 8,10,783 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 61.39 கோடியாக உயர்ந்துள்ளது