8 ஆண்டுகளாக தன்னுடன் உறவிலிருக்கும் காதலன் தன்னிடம் “ஐ லவ் யூ” கூறவில்லை என காதலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விநோத சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள நிலையில் அது வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கேர்ட்டூட் நோக்மா 26 வயதான இவர் ஹெர்பிர்ட் சலாலிகி என்ற 28 வயது நபரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், அண்மையில் கேர்ட்டூட் நோக்மா, நீதிமன்றத்தில் தனது காதலன் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் தன் காதலனுக்கும் தனக்கும் ஒரு மகன் இருந்தும் அந்த மகன் மீது தன் காதலன் அக்கறையே இல்லாமல் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளதுடன், முக்கியமாக தன் காதலன் தன்னை காதலித்து வரும் 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட “ஐ லவ் யூ” சொன்னதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தன் காதலனுக்கு தான் ஜாம்பிய நாட்டு வழக்கப்படி வரதட்சனை கொடுத்ததாகவும் , எனினும் தன் காதலன் தனக்கு ஒரு சிறிய மோதிரம் கூட வாங்கி கொடுத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காதலன் தனக்கு 8 ஆண்டுகளாக “ஐ லவ் யூ” சொல்லவில்லை. என காதலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.